தேயிலை தோட்டம் மற்றும் ரப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சி ஒப்பந்தம் நீடிப்பு!!

15 view
சிறிய தேயிலைத் தோட்ட மற்றும் ரப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சி கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கிராம நிதியளிப்பு வேலை திட்ட காலப்பகுதியை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்குகிறது. சிறிய தேயிலைத் தோட்டம் மற்றும் ரப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சி கருத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசுக்கும் மற்றும் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கருத்து திட்டத்தின் கீழ் கிராமிய நிதியளிப்பு வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த நிகழ்ச்சி திட்டம் 2022/12/31 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது. இவ்வேளை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் மேலும் 172 . 35 மில்லியன் ரூபாய் பயனாளிகளுக்கு கடனாக வழங்கப்பட உள்ளதுடன், அதனால் குறித்த வேலை திட்டத்தின் காலப்பகுதியை 2023 /06 மாதம் 30 ஆம் தேதி வரை நீடிப்பதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது.
The post தேயிலை தோட்டம் மற்றும் ரப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சி ஒப்பந்தம் நீடிப்பு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース