மயிலிட்டி கடலில் மீனவர் மாயம்: கவிழ்ந்த நிலையில் படகு மீட்பு!
13 view
யாழ்ப்பாணம் பலாலி, அந்தோணிபுரம் பகுதியில் இருந்து மயிலிட்டி கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த மீனவர் நேற்று மதியம் பலாலி – அந்தோணிபுரம் கடற்றொழிலாளர் சங்கத்திற்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீனவரின் படகு கவிழ்ந்த நிலையில் கரையை நோக்கி அடித்து வரப்பட்டது. இதை அவதானித்த மீனவர்கள் அவரது படகு, வலைகளை மீட்டனர். இவர் அதே பகுதியில் வசிக்கும் 56 அகவையுடைவர் என தெரியவந்துள்ளது. காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை கடற்படையினரும் காவல்துறையினரும் ஆரம்பித்துள்ளனர்.
The post மயிலிட்டி கடலில் மீனவர் மாயம்: கவிழ்ந்த நிலையில் படகு மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மயிலிட்டி கடலில் மீனவர் மாயம்: கவிழ்ந்த நிலையில் படகு மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
