சுமார் 10,000 பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

6 view
நாட்டின் பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய 9,417 பொலிஸ் அதிகாரிகளுக்கு அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சமர்ப்பித்த யோசனைக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பதவி உயர்வு பெறும் பொலிஸ் அதிகாரிகளில் 8,312 ஆண்களும், 1,005 பெண்களும் உட்பட சாதாரண பதவியில் உள்ளவர்கள் முதல் அதிஉயர் பதவியில் உள்ளவர்கள் வரை உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை பல வருடங்களாக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இவர்களுக்கு பதவி உயர்வுகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சுமார் 10,000 பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース