காணி தகராறில், அண்ணன் தம்பி அடிதடியால் ஏற்பட்ட விபரீதம்!
14 view
மொனராகலை, புத்தல போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட யுதஹனாவ பன்சல வீதி பிரதேசத்தில் இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட காணி தகராறில் தம்பியின் தலையை அண்ணன் உடைத்த சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சாதாரணமாக இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் முத்திய நிலையில் கரும்பு வெட்டும் கத்தியால் தம்பியின் தலையை அண்ணன் வெட்டியதாக புத்தல போலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவரும் தனது பெற்றோரின் தான நிகழ்வுக்காக மற்றும் ஒரு சகோதரரின் வீட்டிற்கு சென்றிருந்தபோது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் இருவரும் காயம் அடைந்து புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது தம்பி மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கும் பின்னர் அங்கிருந்து பதுளை வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புத்தல போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
The post காணி தகராறில், அண்ணன் தம்பி அடிதடியால் ஏற்பட்ட விபரீதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணி தகராறில், அண்ணன் தம்பி அடிதடியால் ஏற்பட்ட விபரீதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
