மியன்மார் அகதிகள் யாழ் சிறைச்சாலைக்கு – பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி
14 view
வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்கரப்பில் வைத்து கடற்படையால் அழைத்து வரப்பட்ட மியான்மார் நாட்டு அகதிகள் யாழ். சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியா நோக்கி செல்ல தயாராக இருந்த நிலையில் படகு பழுதடைந்து தத்தளித்த நிலையில் வெற்றிலை கேணி கடற்பரப்பை அண்மித்த கடற் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் படகு ஓட்டி உற்பட சுமார் 105 பேர் காப்பாற்றப்பட்டனர். குறித்த அகதிகள் மியன்மாரில் இருந்து பங்களாதேசில் தங்கி இருந்த முஸ்லிம்கள் என அறியக் கிடைக்கும் நிலையில் இந்தோனேசியா நோக்கி கடல் வழியாக செல்ல தயாராக இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கான உணவு மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் மல்லாக நீதவான் நீதிமன்றத்தில் பொலிசாரால் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பொலிசார் இன்று திங்கட்கிழமை இரவு அவர்களை நீர்கொழும்புக்கு அனுப்பி…
The post மியன்மார் அகதிகள் யாழ் சிறைச்சாலைக்கு – பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மியன்மார் அகதிகள் யாழ் சிறைச்சாலைக்கு – பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
