பெண்கள் மத்திய ஸ்தாபனத்தின் 40வது ஆண்டு நிறைவு விழா!
6 view
பெண்கள் மத்திய ஸ்தாபனத்தின் 40வது ஆண்டு நிறைவையிட்டு கடந்த சனிக்கிழமை மாலை சீதுவையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் விழா நடத்தப்பட்டது. சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிடம் உள்ள ஆடை தொழிற்சாலைகளை சேர்ந்த பெண் ஊழியர்கள் இந்த பெண்கள் மத்திய ஸ்தாபனத்தின் அங்கத்தவர்களாக இருக்கின்றனர்.பெண்கள் மத்திய ஸ்தாபனத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவையிட்டு அதனை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்வில் நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் வருகை தந்த பெண் பிரதிநிதிகள் பங்குபற்றினர். வடக்கு பகுதியிலிருந்து வருகை தந்த தமிழ் பெண் தொழிலாளர்களும் பங்கு பற்றியமை விஷேசடம் அம்சமாகும்.இதன்போது நான்கு நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதில் ஒரு நூலில் 40 பெண் தொழிலாளர்களது வாழ்க்கை வரலாறு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. பெண் தொழிலாளர்களுக்காக நீண்ட காலம் சேவையாற்றிய பலர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
The post பெண்கள் மத்திய ஸ்தாபனத்தின் 40வது ஆண்டு நிறைவு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண்கள் மத்திய ஸ்தாபனத்தின் 40வது ஆண்டு நிறைவு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
