மலையகத்தில் மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு
6 view
2019,2020,2021 ஆண்டுகளில் க.பொ.த சாதரண தர பரீட்சையில் சித்தி பெற்ற 19 மாணவர்களுக்கான பாராட்டு விழா கிராமிய தோட்ட அபிவிருத்தி மன்றம் மற்றும் நாமகள் ஐக்கிய இளைஞர்,விளையாட்டு கழகங்களின் ஏற்பாட்டில் ஸ்டொக்ஹோம் மைதானத்தில் நடைபெற்றது.இதன்போது பாடசாலை மாணவர்கள் ஊர்வலமாக ,பெற்றோர் சகிதம் அழைத்து வரப்பட்டனர்.அதன் பின்னர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில்.சாமிமலை பாரதி தமிழ்வித்தியாலயத்தின் அதிபர் வாசுதேவன்,அம்பகமுவ செயலக பிரிவின் விளையாட்டு துறை அதிகாரி அரவிந்த, மற்றும் இளைஞர் சேவைகள் அதிகாரி கனகராஜ்,நோர்வுட் பொலிஸ்.உத்தியோகஸ்தர். குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அத்துடன் நேற்று காலை முதல் மன்றத்தின் ஸ்தாபகர். மறைந்த சமூக செயற்பாட்டாளர். ஜோர்ஜ் கேசவனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
The post மலையகத்தில் மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையகத்தில் மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
