ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி!

12 view
ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி உள்ளிட்ட கொண்டாட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியைக் காண பெருந்திரளான மக்கள் இன, மத பேதமின்றி ஜனாதிபதி அலுவலக வளாகத்தைச் சுற்றி திரண்டிருந்தனர். நிகழ்ச்சியைக் காண்பதற்காக அங்கே குழுமியிருந்த மக்களிடம் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டிருந்ததுடன், ஜனாதிபதிக்கும் அமோக வரவேற்பளித்தனர். அங்கு வருகை தந்திருந்த சிறுவர்களிடம் விவரங்களை கேட்டறிந்த ஜனாதிபதி, அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த பாடகர் குழுவினரின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் கிறிஸ்துமஸ் கரோல் நிகழ்ச்சியும் ஆரம்பமானது. டி.எஸ் சேனாநாயக்கவின் சிலைக்கு முன்பாக உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த ஜனாதிபதி, அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருடன்…
The post ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース