சாமிமலை தோட்டத்தில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள்!
8 view
சாமிமலை பகுதியில் உள்ள ஹொரன பிளான்டேசனுக்கு உரித்தான ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் இன்று காலை முதல் தொழிலாளர்கள் தோட்ட தேயிலை தொழிற்சாலை முன்பாக பணி பகிஸ்கறிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த மாதம் தொழில் பிணக்குகள் சம்பந்தமாக ஹட்டன் தொழில் ஆணையாளர் நாயகம் முன்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது முகாமையாளர் ஏற்றுக் கொண்ட நூத்தி பிரிவில் உள்ள வெளிக்கள உத்தியோகத்தரை இடமாற்றம் செய்வதாக இருந்தும் இன்று வரை அந்த தோட்ட நிர்வாகம் வெளிக்கள உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யாததை எதிர்த்து இன்று காலை முதல் தொடர் பணி பகிஸ்கரிப்பு மேற் கொண்டு வருகின்றனர்.
The post சாமிமலை தோட்டத்தில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாமிமலை தோட்டத்தில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
