பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மாவா விற்றவர் கைது!
14 view
பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கலந்த மாவா பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயற்படும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, தான் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாவா பொருளை விற்பனை செய்வதாகவும் தனக்கு இதனால் அதிக லாபம் கிடைப்பதாகவும் நீண்ட காலமாக இந்த தொழிலை மறைமுகமாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். The post பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மாவா விற்றவர்…
The post பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மாவா விற்றவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மாவா விற்றவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
