ஊட்டச் சத்துக்களை அதிகரிக்க பால் மா பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு!

6 view
திருகோணமலை தம்பலகமம் பிரதேச செயலகப் பகுதிக்கு உட்பட்ட மந்தபோசனையுடைய, குழந்தைகளுக்கு  தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பால் மா பக்கற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.  தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று (19) திங்கட் கிழமை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் அங்கர் நிறுவனம் ஊடாக ஒருவருக்கு தலா 400கிராம் பெறுமதியான இரு பக்கற்றுக்கள் வீதம் 91 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.  பிள்ளைகளின் வளர்ச்சி,மந்தபோசனை தொடர்பில் இணங்காணப்பட்ட நிலையில் இது உரியவர்களுக்கு வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் மலர்விழி, திஸ்ஸபுர இரானுவ முகாமின் பொறுப்பதிகாரி மேஜர் என்.சி.மாரசிங்க மற்றும் தாய்மார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post ஊட்டச் சத்துக்களை அதிகரிக்க பால் மா பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース