கடலுக்குள் விபத்தான கார்!!
8 view
மாத்தறை கதிர்காமம் பிரதான வீதியில், பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் பயணித்த கார் ஒன்று கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தினால் அதிர்ச்சி அடைந்த 50 வயதுடைய விரிவுரையாளர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தெவிநுவர பகுதியிலிருந்து மாத்தறை நகரை நோக்கி வந்து கொண்டிருந்தபோது குறித்த கார் வீதியை விட்டு விலகி கடலில் விழுந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் விரைந்து குறித்த சாரதியை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்ததாக, மாத்தறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post கடலுக்குள் விபத்தான கார்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடலுக்குள் விபத்தான கார்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
