ஹங்குராங்கெத்த பகுதியில் பாரிய பஸ் விபத்து!!
7 view
கண்டி, பண்டாரவளை பிரதான பாதையில் ஹங்குராங்கெத்த போலீஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் நேற்று மாலை பஸ் விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 15 க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர். கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளை நோக்கி பயணித்த பஸ்ஸும், பண்டாரவளையில் இருந்து அதே வழியில் கண்டின நோக்கி பயணித்த பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த போது பலத்த காயங்கள் அடைந்த பயணிகள், கீர்த்தி பண்டாரபுர கழகத்தின் பிரதேச வைத்தியசாலைக்கும், ஒரு சிலர் வலப்பனை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குறித்து விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
The post ஹங்குராங்கெத்த பகுதியில் பாரிய பஸ் விபத்து!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹங்குராங்கெத்த பகுதியில் பாரிய பஸ் விபத்து!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
