தெற்காசியா போட்டியில் பதக்கங்களை குவித்த மலையக தமிழன்!!
6 view
தெற்காசியா விளையாட்டு போட்டியில் இலங்கை சார்பாக பங்கு பற்றிய பூண்டுலோயாவை சேர்ந்த துரைசாமி இலங்கைக்காக 8 பதக்கங்களை வென்று தந்துள்ளார். இலங்கை இந்தியா, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய ஐந்து நாடுகள் பங்கு பற்றிய இப் போட்டி மும்பை மற்றும் உடுப்பி எனும் இரு இடங்களில் நடத்தப்பட்டது. மும்பையில் கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை இடம் பெற்ற போட்டியில் குண்டு எறிதல்,சுற்றி எரிதல் ஆகிய போட்டிகளில் இரு தங்கப் பதக்கங்களையும், பரிதி வட்டம் எறிதல் வேகநடை ஆகியவற்றில் வெள்ளி பதக்கங்களையும் துரைசாமி பெற்றுள்ளார். அதேபோல கர்நாடகா உடுப்பியில் இம்மாதம் 8ம் திகதி முதல் 10ம் திகதி வரை இடம்பெற்ற போட்டிகளில் சுற்றியறிதல், பரிதி வட்டம் எறிதல் என்பவற்றில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், 4*400 ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கத்தையும், குண்டறிதல் போட்டியில் வெண்கல பதக்கத்தையும் வெற்றி ஈட்டி மொத்தமாக 8 பதக்கங்களை நம் நாட்டுக்காக வென்று தந்துள்ளார் துரைசாமி.
The post தெற்காசியா போட்டியில் பதக்கங்களை குவித்த மலையக தமிழன்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெற்காசியா போட்டியில் பதக்கங்களை குவித்த மலையக தமிழன்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
