நானுஓயா ஆற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

6 view
நானுஓயா போலீஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா, மாஹாஎலிய காட்டுப் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிக்கு விறகு வெட்ட சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை அவதானித்து போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, குறித்து காட்டுப் பகுதிக்குச் சென்ற நானுஓயா, போலீசார் சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும். மேலும் கடந்த ஒரு மாதமாக குறித்த நபர் காணாமல் போனதாகவும் தெரிய வருகிறது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் 51 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும் குறித்த சடலம் உருக்குலைந்து நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட ஆதார பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நானுஓயா  போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post நானுஓயா ஆற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース