அரசு தொழிலில் மோசடி!!
6 view
அரசு தொழில் சந்தையில் தொழில் பெற்று தருவதாக தெரிவித்து இளைஞர், யுவதிகளை ஏமாற்றி, தபால் அலுவலகம் ஊடாக செயல்படுத்தப்படும் PMT முறை நிதி மோசடி செய்த நபர் ஒருவர் பதுளையில் நேற்றைய முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகம் நபர் தொடர்பில் பதுளை மஹியங்கனை மற்றும் ஹாலிஎல போலீஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பதுளை பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதுளை பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சந்தேக நபர் கடந்து கொரோனா தோற்றின் போது பதுளை பொது நூலகத்திற்கு வருகை தரும் நபர்களின் தகவல்களை பதிவு செய்ய வைத்திருந்த புத்தகத்தின் இரண்டு தாள்களை கிழித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அலைபேசி உரையாடல்களின் போது தொழில் இல்லாதவர்களுக்கு அரசு தொழில் பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
The post அரசு தொழிலில் மோசடி!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசு தொழிலில் மோசடி!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
