திட்டமிட்ட காணி அபகரிப்புக்களை நிறுத்து! திருமலையில் போராட்டம்
14 view
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சுற்றுவட்டத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுப்பு. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்குக் கிழக்கு மக்கள் போராட்டத்துக்கான ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை, பயங்கரவாதச் தடைச் சட்டதை நீக்கு, இராணுவ மயமாக்கலை நிறுத்து, திட்டமிட்ட காணி அபகரிப்புக்களை நிறுத்து போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதேவேளை நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த போராட்டமானது இன்று திருகோணமலையில் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
The post திட்டமிட்ட காணி அபகரிப்புக்களை நிறுத்து! திருமலையில் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திட்டமிட்ட காணி அபகரிப்புக்களை நிறுத்து! திருமலையில் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
