தண்ணீருக்குப் பயந்து பைத்தியக்கார நாய்களைக் குளிப்பாட்ட முடியாது-சஜித் பகிரங்கம்

7 view
மொட்டு ஒன்று சேர்ந்து சிறிலங்கா அதிபருக்கு கிண்ணம் வழங்கி மொட்டு தொப்பி அணிந்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் இப்போது இரு தரப்பல்ல ஒரே தரப்பெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டம் பிங்கிரிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று(17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானியும் நாடாளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டார அவர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்ததோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். மொட்டுவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதுள்ள ஆட்டம் கிடைத்த அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான ஆட்டமே என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆட்சியதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள இருதரப்பும் ஒன்றிணைய முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தண்ணீருக்குப் பயந்து பைத்தியக்கார நாய்களைக் குளிப்பாட்ட முடியாது எனத் தெரிவித்த அவர்,அதே போன்றே, தேர்தல்களுக்கு பயந்த அரசாங்கத்தை தேர்தலுக்கு அழைத்துச் செல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.…
The post தண்ணீருக்குப் பயந்து பைத்தியக்கார நாய்களைக் குளிப்பாட்ட முடியாது-சஜித் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース