இலங்கையில் தீராத முட்டை பிரச்சினை – ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
6 view
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தவறான கணக்கீடுகளினால் இந்த நாட்டில் முட்டைகளுக்கு நிலையான விலையை நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் அநுரசிறி மாரசிங்க குற்றம் சுமத்தினார். அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினால் நீதிமன்றில் பெறப்பட்ட தடை உத்தரவின் பிரகாரம் 50 ரூபாவாக இருந்த முட்டை தற்போது கட்டுப்பாட்டு விலையின்றி 55 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அநுரசிறி மாரசிங்க தெரிவித்தார். நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவு காரணமாக நெருக்கடியாக இருந்த முட்டை விலை மேலும் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும், இந்த நிலையில் முட்டை மற்றும் பண்ணை விலைக்கு கட்டுப்பாட்டு விலை இல்லை எனவும் அநுரசிறி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; முட்டை ஒன்றின் சில்லறை விலை 50 ரூபாவுக்கு மேல் செல்லாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க…
The post இலங்கையில் தீராத முட்டை பிரச்சினை – ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் தீராத முட்டை பிரச்சினை – ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
