பல்கலைக்கழக மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு
6 view
வீரவில ஏரியின் மதகுக்கு அருகில் நீராடச் சென்ற ஜயவர்தனபுர பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலம் நேற்று (17) இரவு மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பதுளை தெமட்டவெல்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் கொண்ட மாணவர்கள் குழு திஸ்ஸமஹாராம தெபரவெவ பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு மாணவனின் வீட்டுக்கு சென்று திரும்பி வந்த போதே இடையில் குறித்த ஏரியில் நீராடச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post பல்கலைக்கழக மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல்கலைக்கழக மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
