தனியார் பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட இ.போ.ச. பஸ் மோதி ஒருவர் படுகாயம்..!
13 view
புத்தளம் – குருநாகல் வீதியின் கல்லடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். குருநாகலிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ்ஸொன்று தனியார் பஸ்ஸொன்றை முந்திச் செல்ல முற்பட்டவேளை, முன்னால் மீன்களைக் கொண்டு சென்ற துவிச்சக்கர வண்டியின் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது மீன் வியாபாரி படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு விபத்தில் படுகாயமடைந்தவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான மீன் வியாபாரி கல்லடி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
The post தனியார் பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட இ.போ.ச. பஸ் மோதி ஒருவர் படுகாயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனியார் பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட இ.போ.ச. பஸ் மோதி ஒருவர் படுகாயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
