உள்ளூராட்சி தேர்தல் குறித்து முடிவு – அடுத்த வாரம் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!
13 view
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆராய்வதற்ககாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி கலைந்துரையாடவுள்ளது. இதன்போது தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அறியமுடிகின்றது. அத்தோடு ஏற்கனவே சான்றளிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post உள்ளூராட்சி தேர்தல் குறித்து முடிவு – அடுத்த வாரம் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூராட்சி தேர்தல் குறித்து முடிவு – அடுத்த வாரம் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.