நிறுவனங்களை தனியாருக்கும், வெளிநாட்டுக்கும் விற்பதற்கு அரசாசங்கம் முயற்சிக்கின்றது – திஸ்ஸ விதாரண!
16 view
எதிர்வருகின்ற தேர்தலில் யாழ்ப்பாண பிரதேசத்தில் லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை சாவி சின்னத்தில் போட்டியிட செய்து வெற்றி பெற செய்து எங்கள் போராட்டத்தினை அரசாங்கத்திற்கு வலுவாக வழங்குவதடன் கட்சியினை பலப்படுத்தி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன் நின்று போராடுவோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்திருந்தார். இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; நாட்டின் சமூகம், பொருளாதாரம் ஆகியன உக்கிரமடைந்திருக்கின்றன.கடந்த காலங்களில் டொலர் உயர்வடைந்து எண்ணெய்,சிலிண்டர் போன்றவற்றுக்கு வீதியில் வரிசையில் நின்றுகொண்டிருந்தோம்.மக்கள் மிகவும் மோசமான நிலையினை அடைந்திருந்தார்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிவாய்ப்புக்களை இழந்திருக்கின்ற சூழ்நிலையிலும் கூட இந்த அரசாங்கம் ,இலாபம் அடைந்து வரும் நிறுவனங்களையும் ,சொத்துக்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது.இதனால் நாட்டிற்கு பொருளாதார பின்னடைவு ஏற்படும். இதனால், நாட்டின் இளைஞர்,யுவதிகள் வேலைவாய்ப்பினை இழந்து வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.இந்த நிலைமை என்ன என்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது. லங்கா…
The post நிறுவனங்களை தனியாருக்கும், வெளிநாட்டுக்கும் விற்பதற்கு அரசாசங்கம் முயற்சிக்கின்றது – திஸ்ஸ விதாரண! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிறுவனங்களை தனியாருக்கும், வெளிநாட்டுக்கும் விற்பதற்கு அரசாசங்கம் முயற்சிக்கின்றது – திஸ்ஸ விதாரண! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
