ஒரே பிரிவில் தொடர்ச்சியாக கடமையாற்றியவர்களுக்கு கட்டாய இடமாற்றம்! – வெளியான அறிவிப்பு
11 view
ஒரே கிராம சேவகர் பிரிவில் 05 வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவகர் உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்றம் செய்யப்படாததற்கு சிறப்புக் காரணம் உள்ள அதிகாரிகளைத் தவிர, 5 ஆண்டுகள் பணி முடித்த மற்ற அனைத்து கிராம அலுவலர்களையும் கட்டாயம் இடமாற்றம் செய்ய வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதியுடன் 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் வருடாந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்படாத உத்தியோகத்தர்கள் இருப்பின் அவர்களுக்கு இடமாற்ற உத்தரவு வழங்குமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
The post ஒரே பிரிவில் தொடர்ச்சியாக கடமையாற்றியவர்களுக்கு கட்டாய இடமாற்றம்! – வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரே பிரிவில் தொடர்ச்சியாக கடமையாற்றியவர்களுக்கு கட்டாய இடமாற்றம்! – வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
