கோழி இறைச்சி விலை அதிகரிப்பு! பண்டிகைக் காலத்திலும் இலங்கையர்களுக்கு நெருக்கடி
6 view
கோழி இறைச்சிக்கான தட்டுப்பாடு காரணமாக 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை இந்த நாட்களில் 1,150 முதல் 1,200 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார். கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான தாய் விலங்குகள் இல்லாத காரணத்தினால் முட்டை தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக கோழி இறைச்சிக்கும் தட்டுப்பாடு காரணமாகவே விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தாய் விலங்குகள் பற்றாக்குறையால் குஞ்சு ஒன்றின் விலை 500 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 90% சிறிய மற்றும் நடுத்தர கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டில் முட்டைத் தேவையில் 40% க்கும் அதிகமானவை சிறு மற்றும் நடுத்தர பண்ணைகளால் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போதைய நெருக்கடி காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பண்ணை உரிமையாளர்கள் தற்போது நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 10% முட்டைத் தேவையை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். …
The post கோழி இறைச்சி விலை அதிகரிப்பு! பண்டிகைக் காலத்திலும் இலங்கையர்களுக்கு நெருக்கடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோழி இறைச்சி விலை அதிகரிப்பு! பண்டிகைக் காலத்திலும் இலங்கையர்களுக்கு நெருக்கடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
