மன்னார் நானாட்டானில் வயோதிப தம்பதியை தாக்கி பணம் நகை கொள்ளை!

12 view
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உமநகரி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப தம்பதியை தாக்கி 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 30 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளை இடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை )அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உமநகரி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப தம்பதியினரின் வீட்டினுல் இன்று ( வெள்ளிக்கிழமை) அதிகாலை உள் நுழைந்த திருடர்கள் வீட்டின் கூரை ஓடுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். மூன்று கொள்ளையர்கள் வீட்டினுள் நுழைந்த நிலையில் ஆயுதங்களால் தம்பதியினர் இரு வரை சரமாரியாக தாக்கி பணம் மற்றும் தாலிக்கொடி உட்பட 30 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை களவாடிச் சென்றுள்ளனர். பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த…
The post மன்னார் நானாட்டானில் வயோதிப தம்பதியை தாக்கி பணம் நகை கொள்ளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース