திருகோணமலையில் இன்று திறந்து வைக்கப்பட்ட கேட்போர் கூடம்
14 view
2.5 மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக கேட்போர் கூடம் இன்று (16) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவினால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறான மண்டப வசதி இன்மையால் கடந்த காலங்களில் அதிக எண்ணிக்கையானவர்களை கொண்டு கூட்டங்களை நடாத்துவதிலும் அதிகாரிகள் சிரமங்களை முகங்கொடுத்தனர். இந்த நிலையில் புனர்நிர்மாண பணி காரணமாக அலுவலக கூட்டங்கள் உள்ளிட்ட செயலமர்வுகளை இடர்பாடின்றி மேற்கொள்ள இக்கேட்போர் கூடம் ஏதுவாக அமைந்துள்ளது. இன்றைய திறப்பு விழா நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
The post திருகோணமலையில் இன்று திறந்து வைக்கப்பட்ட கேட்போர் கூடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் இன்று திறந்து வைக்கப்பட்ட கேட்போர் கூடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
