இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அனுமதி!
15 view
இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அந்நாட்டு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்வதற்கு ‘வொஸ்ட்ரோ’ என்ற கணக்கை தொடங்க மத்திய வங்கி ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையும் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு அமெரிக்க டொலர்களுக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூலை மாதம் இந்த முறையை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், ரஷ்யா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளும் இதே அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
The post இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
