இலங்கையில் மீண்டும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! ஜனாதிபதி பகீர் தகவல்
6 view
பசியில் கட்சி, நிற பேதம் இல்லை என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையை வலிமையான நாடாக எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டும் பல்துறை கூட்டுப் பொறிமுறையின் பதுளை மாவட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க; உணவுப் பாதுகாப்புத் திட்டம் பதுளை மாவட்டத்தில் எவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் உரம் மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிய நேரத்தில்தான் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கினோம். எந்த நாடும் நமக்கு கடன் கொடுக்காத போது. 2023-ம் ஆண்டு உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அதை சமாளிக்க உணவு பாதுகாப்பு திட்டத்தை தொடங்கினோம். ஒவ்வொரு பிரதேச…
The post இலங்கையில் மீண்டும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! ஜனாதிபதி பகீர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் மீண்டும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! ஜனாதிபதி பகீர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
