ஓமானில் விற்பனை செய்யப்படும் இலங்கைப் பெண்கள் – அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு
11 view
சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், அண்மைக்காலமாக பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பில் பிழையான செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்தும் வெளியிட்டிருந்தமை வன்மையாக கண்டிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்; ஓமானில் மனித கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குழுவொன்று அங்கு சென்றுள்ளனர். இந்தக் குழுவில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர், மூன்று விசாரணை அதிகாரிகளும், மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் , ஒரு பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் அடங்குகின்றனர். இந்த மனிதக் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் குறித்து அறிந்து அவர்களுக்கு எதிராக சட்டத்தினை முன்னெடுக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏனெனில் அவர்கள் மூலம் தான்…
The post ஓமானில் விற்பனை செய்யப்படும் இலங்கைப் பெண்கள் – அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓமானில் விற்பனை செய்யப்படும் இலங்கைப் பெண்கள் – அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
