‘பாபா’ மறுவெளியீடு: வசூல் விபரம் வெளியீடு!
6 view
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘பாபா’ திரைப்பட மறுவெளியீட்டினால் இரசிகர்கள் தற்போது இன்ப வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்ட திரைப்படமான ‘பாபா’ படத்தை அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், முக்கிய வேடங்களில் ரியாஸ் கான், கவுண்டமணி, தில்லி கணேஷ், சுஜாதாம் நம்பியார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பாபா படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகளான நிலையில், மீண்டும் மறு படத்தொகுப்பும் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு படத்தை புதுப்பொழிவுடன் மேம்படுத்தி கடந்த 10ஆம் திகதி மறுவெளியீடு செய்தனர். இந்நிலையில், ‘பாபா’ மறுவெளியீட்டில் இதுவரை 1 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post ‘பாபா’ மறுவெளியீடு: வசூல் விபரம் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘பாபா’ மறுவெளியீடு: வசூல் விபரம் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
