தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கான சிரேஷ்ட அதிகாரிகளின் குழு கூடியது
6 view
தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான, சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் நிதி ஆணைக்குழுவின் தலைவர் சுமித் அபேசிங்க ஆகியோரும் பங்கேற்றனர். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் பிரகாரம், தேசிய கொள்கைகளை திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் தேசிய சபையொன்று நியமிக்கப்பட்டதாகவும், அதன் கீழ் 02 உபகுழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க இங்கு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று செயற்படும். அதன் கீழ், நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அவசியமான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்காக தேசிய சபை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த உபகுழு கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதற்தடவையாக கூடியபோதே, “தேசியக்…
The post தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கான சிரேஷ்ட அதிகாரிகளின் குழு கூடியது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கான சிரேஷ்ட அதிகாரிகளின் குழு கூடியது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
