சிறையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டும் – சம்பிக்க!

15 view
தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கட்சி தலைவர்கள் மாநாட்டில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுக்கப்பட வேண்டும், சிறைச்சாலைகளில் உள்ள முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டோர் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதியால் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களாகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் அந்த இயக்கத்துக்கு தலைமை ஏற்றிருந்த குமரன் பத்மநாதன் வெளியில் இருக்கிறார். ராமன், நகுல், கருணா போன்றவர்களும் வெளியில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் சிறைச்சாலையில் உள்ள 31 முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன்,…
The post சிறையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டும் – சம்பிக்க! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース