காலநிலையில் ஏற்படும் மாற்றம்: வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
12 view
எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post காலநிலையில் ஏற்படும் மாற்றம்: வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலநிலையில் ஏற்படும் மாற்றம்: வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
