யாழில் இப்படியும் ஒரு கொள்ளை – கம்பத்துடன் அறுத்து எடுக்கப்பட்ட வீதி மின் விளக்குகள்!
15 view
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோலார் சக்தியில் இயங்கும் வீதி மின் விளக்குகள் கொள்ளையா்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தலா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 5 ற்கும் மேற்பட்ட வீதி மின்விளக்குகள் அவை பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பத்துடன் சோ்த்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. கரவெட்டி பிரதேசசபையினால் அமைக்கப்பட்ட மேற்படி வீதி விளக்குகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட வீதி விளக்குகளை சாதாரணமாக எடுத்துச் செல்ல முடியாது. என்பதுடன் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பத்தை அடியில் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்த கொள்ளை சம்பவத்தை ஒரு குழுவாகவே செயற்படுத்தியிருக்க முடியும் என கூறும் பொறுப்புவாய்ந்தோா், அப்பகுதியில் இராணுவ முகாமும் அமைந்துள்ள நிலையில் அவா்களும் இது குறித்து கண்காணிக்கவில்லை எனவும் கூறியுள்ளனா்.
The post யாழில் இப்படியும் ஒரு கொள்ளை – கம்பத்துடன் அறுத்து எடுக்கப்பட்ட வீதி மின் விளக்குகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இப்படியும் ஒரு கொள்ளை – கம்பத்துடன் அறுத்து எடுக்கப்பட்ட வீதி மின் விளக்குகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
