சிறுபான்மை மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு! – பிரதமர் மீண்டும் உறுதி
6 view
சிறுபான்மை மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் தமது கேள்வியில், பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். இங்குள்ள சிறுபான்மை சமூகங்களில் இருந்து உங்களுக்கு எவ்வாறான ஆதரவு கிடைக்கிறது? எதிர்காலத்திலும் இதேபோன்ற ஆதரவை அனுபவிப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா என வினவியுள்ளார். இதற்குப் பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்தன, இலங்கையும் இந்தியாவும் உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடுகளாக உள்ளன. அங்கு மக்கள் அரசாங்கங்களைத் தேர்ந்தெடுப்பதுடன், பதவி நீக்கவும் செய்துள்ளனர். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான உறவு அப்படியே உள்ளது. மேலும், ஒவ்வொரு அரசாங்கமும் அனைத்து குடிமக்களுக்கும், அவர்களின் வாழ்க்கை, பாதுகாப்பு, அத்துடன் பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வி போன்றவற்றில் சாத்தியமான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. இலங்கை அரசியலமைப்பின்முன், அனைவரும் சமம். தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் எவரும் சவால் விடலாம்.…
The post சிறுபான்மை மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு! – பிரதமர் மீண்டும் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுபான்மை மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு! – பிரதமர் மீண்டும் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
