நாட்டின் இனப்பிரச்சினையை ஒற்றையாட்சிக்குள் தீர்க்க முடியாது: அரசுக்கு துணைபோகும் கூட்டமைப்பு எம்.பிக்கள்- கஜேந்திரன் ஆதங்கம்!
15 view
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த அரசாங்கத்தின் முழுமையான ஒடுக்குமுறைக்கு துணை நிற்கிறார்கள்.தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை துணிந்து செய்வதே அரசின் செயற்பாடாக உள்ளது.இதனை எங்கள் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரணிலை பொறுத்த வரையில் இப்போது தேர்தல் நடத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றது. அவ்வாறு தேர்தல் நடந்தால் அவரும்,அவரின் மொட்டுக்கட்சியும் முற்றாக சிங்கள மக்களின் ஆதரவினை மீண்டும் ஒரு முறை இழப்பதனை நிரூபிக்கும் ஒரு சம்பவம் நடந்து விடும் என்பதால் தேர்தல் நடத்தாமல் காலம் கடத்துவதில் முற்படுகிறார். இனப்பிரச்சினை தொடர்பாக பேசுவதாக இருந்தால் 74 ஆண்டுகளாக புரையோடி இருக்கின்ற இனப்பிரச்சினையை ஒற்றையாட்சிக்குள் தீர்க்க முடியாது ,அப்படி தீர்ப்பதாக இருந்தால் ஒற்றையாட்சியை கைவிட்டு சமஷ்டி அமைப்புக்கு செல்ல வேண்டும் ,என்ற விடயங்களை சிங்கள மக்களுக்கு சொல்லி அதனடிப்படையில்…
The post நாட்டின் இனப்பிரச்சினையை ஒற்றையாட்சிக்குள் தீர்க்க முடியாது: அரசுக்கு துணைபோகும் கூட்டமைப்பு எம்.பிக்கள்- கஜேந்திரன் ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் இனப்பிரச்சினையை ஒற்றையாட்சிக்குள் தீர்க்க முடியாது: அரசுக்கு துணைபோகும் கூட்டமைப்பு எம்.பிக்கள்- கஜேந்திரன் ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
