பெயர்ப்பலகை போட்ட வீதியை திருத்தம் செய்து தாருங்கள்-மக்கள் ஆர்ப்பாட்டம்
6 view
ஐந்து வருடங்களுக்கு முன் வீதி திருத்தம் செய்து தருவதாக கூறி பெயர்ப்பலகை இட்ட வீதியை தடையின்றி திருத்தம் செய்து தருமாறு மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெக்கப்பட்டிருந்தது. இன்று (வியாழக்கிழமை) திருநாவல்குளம் வாழ் மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெக்கப்பட்டது. இதற்கமைய 2017ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் சுமார் 970 மீற்றர் வீதி செப்பனிடப்பட்டு ஆரம்ப பணிகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் குறித்த வீதி இதுவரை திருத்தம் செய்யாமையால் அப்பகுதி மக்கள் பெரும் செளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதேவேளை குறித்த வீதியை 1500 குடும்பங்கள் பயன்படுத்துவதால் இவ் வீதி திருநாவல்குளம் மற்றும் பட்டைக்காடு கிராமங்களை இணைக்கும் வீதியாகவும் உள்ளமை குறிப்பிடதக்கது.
The post பெயர்ப்பலகை போட்ட வீதியை திருத்தம் செய்து தாருங்கள்-மக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெயர்ப்பலகை போட்ட வீதியை திருத்தம் செய்து தாருங்கள்-மக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
