அரச அதிகாரிகள் ஒருபோதும் காரணம் கூறக்கூடாது! – ஜனாதிபதி ரணில்

6 view
அரச நிறுவனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் அதிகபட்ச அரச சேவையை வழங்குவது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பு என்றும் அரச சேவையை செய்யாமைக்கு அரச அதிகாரிகள் ஒருபோதும் காரணங்களை  கூறக்கூடாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பதுளை மாவட்ட செயலகத்தில் இன்று (15) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது, தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி, அரச அதிகாரிகள் சட்டங்கள் மற்றும் கட்டளைகளை கேடயமாக பாவித்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமே தவிர நிறுவனங்களுக்காக அல்லவென தெரிவித்தார். இதேவேளை, பதுளை மாவட்டத்தின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு, மஹியங்கனை பிரதேச வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, கிராதுருகோட்டே சிறுநீரக வைத்தியசாலையின் செலவினங்களுக்காகப் நிதியும் ஒதுக்கப்படும் என்றார்.
The post அரச அதிகாரிகள் ஒருபோதும் காரணம் கூறக்கூடாது! – ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース