"இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களின் உரிமைகள் புறந்தள்ளப்பட முடியாது"- அமைச்சர் ஹாபிஸ் நசீர்!
13 view
வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து 13 ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி தலைமையில் நடாத்தப்படும் பேச்சுக்களில் (13) அரசியலமைப்பின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதையடுத்தே, அமைச்சர் நஸீர் அஹமட் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள் கரிசனையுடன் உள்ளோம். ஆனால், இத்தீர்வுகள் முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினையாகிவிடக்கூடாது. வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி கோரும் தரப்புக்கள், இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கு வழங்கும் அதிகாரம் என்ன? இதுபற்றி அவர்கள் மனம் திறப்பது அவசியம். சூழ்நிலையைச் சமாளிக்கும் அறிக்கைகள் விடாமல், முஸ்லிம்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பேசுவதே சிறந்தது. இதே நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை…
The post "இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களின் உரிமைகள் புறந்தள்ளப்பட முடியாது"- அமைச்சர் ஹாபிஸ் நசீர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post "இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களின் உரிமைகள் புறந்தள்ளப்பட முடியாது"- அமைச்சர் ஹாபிஸ் நசீர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
