கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு! இரத்தினபுரியில் பரபரப்பு!!
6 view
இங்கிரிய, இரத்தினபுரி வீதியில் உள்ள நம்பபான கடகரெல்ல பாலத்துக்கு அருகில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் இன்று வியாழக்கிழமை டிசம்பர் 15 காலை கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர் 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த நபர் வேறோர் இடத்தில் கொலைசெய்யப்பட்டு, அவரது சடலம் இன்று அதிகாலை குறித்த காட்டுப் பகுதியில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
The post கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு! இரத்தினபுரியில் பரபரப்பு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு! இரத்தினபுரியில் பரபரப்பு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
