இலங்கையில் பல்ப் கள்ளர் – மக்களே அவதானம்
6 view
அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை பிரதான வீதியில் ,பள்ளி குடியிருப்புக்கும் ஆலிம் நகருக்கும் இடைப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்ட சூரிய சக்தி மின்குமிழ் களவாடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை பிரதான வீதியில் பள்ளி குடியிருப்புக்கும் ஆலிம் நகருக்கும் இடைப்பட்ட இடங்களில் யானைக் கூட்டங்களின் வருகையும், பிரயாணம் செய்கின்ற பொதுமக்களின் அசௌகரியமும், இரவு நேரங்களில் வேலை செய்கின்ற விவசாயிகளின் அத்தியாவசிய தேவையும் கருதி பெறுமதி வாய்ந்த சூரிய சக்தியில் இயங்குகின்ற மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதிகாலை பெரிய இரும்புக் குழாயினை அறுத்து சாய்த்து விட்டு அதில் பொருத்தப்பட்டிருந்த சூரிய சக்தி மின் விளக்கை திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள். உடனடியாக அங்கு சென்ற போது மிகவும் மன வேதனையாக இருந்தது. இந்தச் சம்பவம் வருகின்ற போகின்ற எல்லா விவசாயிகள், பயணிகள், பொதுமக்களுக்கு எல்லாம் மிகவும் மன வேதனையை கொடுத்தது. தயவுசெய்து இவ்வாறான அநாகரிகமான செயற்பாட்டின் மூலமாக தங்களுக்கும் தங்களைச் சூழ உள்ளவர்களுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதை விட்டும் தவிர்ந்திருக்குமாறு…
The post இலங்கையில் பல்ப் கள்ளர் – மக்களே அவதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் பல்ப் கள்ளர் – மக்களே அவதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
