திருமலையில் பெண்கள் உரிமை தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம்!
7 view
பெண்கள் உரிமை தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் திருகோணமலை நகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) இடம்பெற்றது. பெண்கள் உரிமையை தொடர்பான 16 நாள் செயல்முனையொட்டியும் ,சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டும் இவ் வீதி நாடகத்தை அகம் மனிதாபிமான வள நிலையம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது பெண்கள் உடலியல், உளவியல் ரீதியாக எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள், பெண்கள் எவ்வாறான சாதனைகளை புரிந்துள்ளார்கள், பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது எவ்வாறு என்பது உள்ளிட்ட பல விடயங்களை விழிப்பூட்டும் வகையில் இவ்வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post திருமலையில் பெண்கள் உரிமை தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் பெண்கள் உரிமை தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
