மாலைதீவுக்கு அனுப்புவதாக கூறி தோட்டத் தொழிலாளிகளிடம் பல லட்சம் ரூபா மோசடி
12 view
மாலைதீவுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி 197 தோட்டத் தொழிலாளர்களிடம் சுமார் 84 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த நபர் கண்டுபிடிக்க நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாலைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்படும் சுற்றுலா ஹொட்டல்களில் வேலைக்கு தொழிலாளர்கள் அவசியம் எனவும் மாதாந்தம் ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும் எனவும் கூறி பிளேக்வோட்டர்ஸ் தோட்டத்தில் வசிக்கும் 197 பேரிடம் தலா 30 ஆயிரம் ரூபா பணத்தை வாங்கிச் சென்றதாக தொழிலாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த தரகர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் தோட்டத்திற்கு சென்று நவம்பர் 15 ஆம் திகதி மாலைதீவுக்கு செல்ல வேண்டும் எனவும் அதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறி தொழிலாளர்களிடம் 12 ஆயிரத்து 500 ரூபாவை அறவிட்டுள்ளார். இரத்மலானையில் உள்ள மருத்துவ நிலையம் ஒன்றுக்கு தொழிலாளர்களை அழைத்துச்…
The post மாலைதீவுக்கு அனுப்புவதாக கூறி தோட்டத் தொழிலாளிகளிடம் பல லட்சம் ரூபா மோசடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாலைதீவுக்கு அனுப்புவதாக கூறி தோட்டத் தொழிலாளிகளிடம் பல லட்சம் ரூபா மோசடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
