தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சரியான அணுகுமுறை! – டக்ளஸ்
9 view
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள, ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உருவாகியுள்ள இந்த சூழலை அனைத்து தரப்புக்களும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் (13.12.2022) இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த விடயம் மீண்டுமொரு முறை வலியுறுத்தப்பட்டது. மேலும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கிடைத்த பல்வேறு சந்தர்ப்பங்களை தமிழ் தரப்புக்கள் தவறவிட்டிருப்பதாகவும், சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் எமது மக்கள் எதிர்கொண்ட பேரழிவுகளை தவிர்த்திருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 45 வருடங்களாக தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளுடன் சம்மந்தப்பட்டவன் என்ற வகையில், குறித்த விடயங்களை பிரஸ்தாபிப்பதற்கான…
The post தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சரியான அணுகுமுறை! – டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சரியான அணுகுமுறை! – டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
