75வது சுதந்திர தினத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு! ஜனாதிபதி உறுதி
6 view
எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் (13) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பொது இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் ஜனாதிபதி இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், ஏனைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வருமாறு:- இந்நாட்டில் நிலவும் பிரச்சினையை தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு இனப்பிரச்சினை என்பதா அல்லது வேறு ஏதாவது பெயரைச் சொல்வதா என்பது முக்கியமல்ல. எமக்கு தேவைப்படுவது இப்பிரச்சினைகளுக்கான தீர்வேயாகும். இதற்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூடுவதற்கு பாராளுமன்றத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. அதற்காகவே கட்சித் தலைவர் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது…
The post 75வது சுதந்திர தினத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு! ஜனாதிபதி உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 75வது சுதந்திர தினத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு! ஜனாதிபதி உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
