மக்கள் விரும்பும் ஆட்சியை ஜனாதிபதி உருவாக்க வேண்டும் ! – ஜே.வி.பி.
7 view
“மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் எந்தவோர் அரசாலும் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாது. முதலில் மக்கள் அவர்கள் விரும்பும் ஆட்சியை உருவாக்குவதற்கு அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.” – இவ்வாறு ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “பொருளாதார நெருக்கடி காரணமாகப் பல தொழில் நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். அவர்களுள் வைத்தியர்களும் அடங்குவர். பல வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். மேலும் பல வைத்தியர்கள் வெளியேறுவதற்காகச் சுகாதார அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளனர். அந்தவகையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து வைத்தியர்கள் இவ்வாறு விண்ணப்பித்து வருகின்றனர். பொருளாதார நிலைமை ஒருபுறம் இருக்க, ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகமாகச் சம்பளம் எடுப்பவர்களைப் பாதிக்கும் வகையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள வரியால் வைத்தியர்கள் வெளியேறுவது மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் விரும்புகின்ற – நம்புகின்ற ஆட்சியை உருவாக்க வேண்டும்.…
The post மக்கள் விரும்பும் ஆட்சியை ஜனாதிபதி உருவாக்க வேண்டும் ! – ஜே.வி.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் விரும்பும் ஆட்சியை ஜனாதிபதி உருவாக்க வேண்டும் ! – ஜே.வி.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
