IMFன் ஆதரவு கிடைக்காது? நாட்டை நாமே ஸ்திரப்படுத்த வேண்டும்! – மத்திய வங்கி ஆளுநர் பகீர் தகவல்

16 view
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அல்லது இல்லாவிட்டாலும் நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வலியுறுத்துகின்றார். இலங்கை பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் வருடாந்த ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். நாம் தற்போது பாரிஸ் கழகம், ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட எமது இரு தரப்பு கடன் கொடுநர்களிடமிருந்து நிதி உறுதிப்பாட்டை பெறும் நடவடிக்கையிலேயே உள்ளோம். அத்துடன், இந்த நடவடிக்கையை மத்திய வங்கி முழுமையாக கைவிட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்துடன் அது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. எனினும், நாம் எந்த வகையிலும் நிதி உறுதிப்பாட்டை பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையை இடைநிறுத்தவில்லை. அது முற்றிலும் பொய்யானது. நாம் தொடர்ந்தும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறோம். அதனை பூரணப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளோம். ஜனவரியில் அதனை பூர்த்திசெய்துகொள்ளமுடியும்…
The post IMFன் ஆதரவு கிடைக்காது? நாட்டை நாமே ஸ்திரப்படுத்த வேண்டும்! – மத்திய வங்கி ஆளுநர் பகீர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース