தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம்- கஜேந்திரகுமார் ஆவேசம்!
11 view
எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று கட்சியின் தலைமைச்செயலகத்தில் இடம்பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய நினைவேந்தலில் போதே அவர் இந்த கருத்தினைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இன்று நாங்கள் பாலசிங்கம் ஐயாவினுடைய நினைவு நாளை மேற்கொண்டிருக்கின்றோம். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் இன்றைய காலகட்டம் அவர் ஒட்டுமொத்த தமிழ்த்தேசத்திற்கும் கையாளுகின்ற ஒரு நிலைமையாகத்தான் இருக்கும். ஏனென்றால் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு அழைப்பு விடுத்திருக்கின்ற இந்த நேரத்திலே விடுதலைப்புலிகள் இயக்கம் யுத்தம் மௌனிக்கப்படாமல் ஒரு இயங்கு நிலையில் இருந்திருந்தால் எங்களுடைய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவும் தமிழ்ச்செல்வம் அண்ணையும் அந்த முழுப்பொறுப்பையும் ஏற்று ஒட்டுமொத்த தேசத்திற்காக இந்த நிலைமைகளைக்கையாண்டு இருப்பார்கள். இதேபோன்று 2001 போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டத்திற்கு பிற்பாடு பலசுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அந்த பேச்சுவார்த்தைகளில்…
The post தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம்- கஜேந்திரகுமார் ஆவேசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம்- கஜேந்திரகுமார் ஆவேசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
