இலங்கையின் திட்டத்திற்கு உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம்
12 view
இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு, உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இம்மூலோபாய திட்டம் 2023 முதல் 2027 டிசம்பர் வரைக்குட்பட்ட காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டதுடன் அதற்கான பெறுமதி 74.87 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இலங்கையின் மூலோபாயத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, இலங்கையின் தேசியக் கொள்கைக் கட்டமைப்பு மற்றும் 2023-2027 க்கான ஐக்கிய நாடுகளின் நிலைபேண்தகு அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும். மேலும் இத்திட்டமானது, நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்கு(SGD)2 இற்கிணங்க, 2030 ஆம் ஆண்டளவில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போஷாக்கு எனும் இலக்கை அடைவதற்கேற்ப நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மூலோபாயத் திட்டம் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளான 1, 5, 10 மற்றும் 13 ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கும் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்கு 17 இற்கமைய தேசிய மனிதாபிமான மற்றும்…
The post இலங்கையின் திட்டத்திற்கு உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் திட்டத்திற்கு உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
